சீனாவில் புத்தர் வடிவ டிரம்ப் சிலைக்கு நல்ல வரவேற்பு!

சீனாவில் புத்தர் வடிவ டிரம்ப் சிலை சீன மக்களிடையை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகளவில் சிரிக்கும் புத்தர் சிலை மிகவும் பிரபலமானது. பல நாடுகளில் புத்த மதத்தை பின்பற்றுபவர் புத்தர் சிலைகளை வீட்டுகளில் வாங்கி வைத்து வழிபடுவர். கையில் ஒரு பையை வைத்திருக்கும் சிரிக்கும் புத்தர் சிலையை, அலுவலகங்களிலும், வீடுகளிலும் வைத்திருப்பர். இவற்றுக்கு உலகம் முழுவதும் நல்ல தேவை உள்ளது. இந்நிலையில், சிரிக்கும் புத்தர் சிலைகளுக்கு போட்டியாக, சிரிக்கும் டிரம்ப் சிலை வந்துள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக பணியாற்றிய டிரம்ப், நடந்து முடிந்த ேதர்தலில் தோல்வியடைந்தார்.

அவர் ஜனாதிபதியாக இருந்த நாட்களில், அவரின் நிர்வாக ரீதியிலான முடிவுகள் அனைத்தும் பெரும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டன. குறிப்பாக சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் ஏற்பட்ட மோதலில், இருநாடுகளிலும் தலைவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், சீன சிற்பிகள் சிலர் புத்தரின் வடிவத்தில் டிரம்ப் தியானம் செய்வது போன்ற சிலையை உருவாக்கி ஆன்லைனில் விற்பனை செய்து வருகின்றனர். இவை சீன மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் விலையானது 18 அங்குல சிலை 650 அமெரிக்க டாலருக்கும், 6 அங்குல சிலை 150 அமெரிக்க டாலருக்கும் விற்று வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *