மேலும் சில பகுதிகள் நாளை விடுவிப்பு!

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பிரதேசங்கள் நாளை (08) காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இதற்கமைய, பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோதமீபுர மாடிக் குடியிருப்பு, கோதமீபுர 24 ஆம் தோட்டம், கோதமீபுர 78 ஆம் தோட்டம், வெலுவன வீதி (தெமடகொடை), ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுகின்றன. 

மேலும், பூகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரிமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, மினுவங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்ஒலுவ பிரதேசத்திற்குட்பட்ட ஜும்மா மஸ்ஜித் மாவத்தை, ஹித்ரா மாவத்தை, புதிய வீதி, அகரகொட மற்றும் அம்பலாந்தோட்டை பிரதேச செயலக பிரிவின் தெற்கு போலான ஆகிய பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

இதேவேளை, மேல் மாகாணத்திற்கு வௌி மாவட்டங்களில் கொவிட் தொற்றாளர்கள் துரிதமாக அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் சுகாதார பிரிவினர் அதிகளவில் அவதானம் செலுத்த வேண்டும் என அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *