முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராய்வு!

கெரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயுமாறு சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

உலகின் தற்போதைய நிலவரம் மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் தீர்மானம் ஒன்றை பெற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் நியமங்களின் அடிப்படையிலேயே மரணங்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்படுகின்றன.

இதேநேரம் மாலைதீவுக்கு சரீரங்களை அனுப்புவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

தற்போது சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் நியமங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மீண்டும் ஆராயுமாறு சுகாதாரத்துறையினரிடம் பிரதமர் கடந்த தினங்களில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் அவர்கள் மீண்டும் உலக நிலைமை மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி ஆராய்ந்து எதிர்காலத்தில் தீர்மானமொன்றை அறிவிப்பார்கள் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *