கொழும்பில் 10 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கம் 3 பிரிவுகள் நாளை விடுவிப்பு!

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் முடக்கப்பட்டிருந்த பகுதியில் நாளை (30) காலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளன.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 3 பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்.

கொழும்பு மாவட்டத்தில் நாளை விடுவிக்கப்படும் பகுதிகள்

1.மட்டக்குளிய பொலிஸ் பிரிவு

2.கரையோர பொலிஸ் பிரிவு (வெரலபட)

3.புறக்கோட்டை பொலிஸ் பிரிவு

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் தொடரும் பகுதிகள்

1.மோதரை பொலிஸ் பிரிவு

2.புளூமண்டல் பொலிஸ் பிரிவு

3.கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு

4.கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு

5.ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் பிரிவு

6.வெல்லவீதிய பொலிஸ் பிரிவு

7.வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு

8.மாளிகாவத்தை பொலிஸ் பிரிவு

9.தெமட்டகொடை பொலிஸ் பிரிவு

10.மருதானை பொலிஸ் பிரிவு

11.கொம்பனிவீதி பொலிஸ் பிரிவின் செகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் பொரள்ளை பொலிஸ் பிரிவின் வனாதமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியவற்றுக்கான தனிமைப்படுத்தலும் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளி பொலிஸ் பிரிவிலுள்ள ரந்திய உயன வீடமைப்பு திட்டம் மற்றும் பெர்கியுசன் வீதியின் தென் பகுதி ஆகியன நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் லக்சந்த செவன வீடமைப்பு திட்டம், சாலமுல் கிராம உத்தியோகத்தர் பிரிவு, விஜயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியனவும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் விடுவிக்கப்படும் பகுதிகள்

1.நீர்க்கொழும்பு

2.ராகம

தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் பகுதிகள்

1.வத்தளை

2.பேலியகொடை

3.களனி

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *