கொரோனா பரவுவது எப்படி?

கொரோனா வைரஸின் தொற்றுக்குள்ளான ஒருவரிடமிருந்து அவரது சளித்துணிக்கைகள் மூலமாக இன்னொருவருக்கு பரவும்.

கொரோனாதொற்றுக்குள்ளானஎல்லோருக்கும்அந்நோயின்தாக்கம்_வெளிப்படுமா?

இல்லை. பெரும்பாலான தொற்றுக்குள்ளானவர்களுக்கு எந்த நோய் அறிகுறியும் இருக்காது அல்லது கணக்கில் எடுக்க முடியாத காய்ச்சல், தடிமன், இருமல் இருக்கலாம்.

கொரோனாவின்பாதிப்புயாருக்குஅதிகமாகஇருக்கும்?

வயதானவர்கள், நாட்பட்ட நோய்களைக் கொண்டிருப்பவர்கள், புற்று நோயாளர்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவான நோயுடையவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள்.

கொரோனாவைரஸின்பரவலுக்குள்அகப்படக்கூடியவர்கள்யார்?

அடிக்கடி பிரயாணம் செய்யக்கூடியவர்கள், அதிகமானவர்களை சந்திக்கக் கூடியவர்கள், சொல்லப்படும் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடந்துகொள்ளாதவர்கள்.

கொரோனாவைரஸின்தொற்றுகையைஅறிந்துகொள்வதுஎப்படி?

பீ சீ ஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனை மூலம்.

இந்தப்பரிசோதனைமூலம்தொற்றுஇல்லைஎன்பதனைஉறுதியாகசொல்லமுடியுமா?

இல்லை. தொற்று இருக்கிறது என்பதனை சொல்லலாம். இல்லை என்று நூறு சதவீதம் சொல்ல முடியாது. தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நாளில் இருந்து 2-14 நாட்களுக்குள் (சராசரியாக 5-10 நாட்களுக்குள்) பீ சீ ஆர் பரிசோதனை மூலம் அறிந்துகொள்ளலாம்.

கொரோனாவைரஸ்தொற்றைகண்டறியாவிட்டால்யாது_நிகழும்?

ஏனையோரிடமிருந்து விலகியிருக்காவிட்டால்,
குறுகிய கால இடைவெளிக்குள் பலருக்கு பரவ வாய்ப்புள்ளது. அதன் மூலம் திடீர் மரணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் ஏனைய நோய்களின் தாக்கத்துள்ளானவர்கள் அதிகளவில் மரணிக்கலாம்.

இவ்வாறுபரவிமரணங்கள்ஏற்படுவதனைத்தடுக்கஎன்னசெய்யலாம்?

நோய் அறிகுறி இல்லாமல் கொரோனா வைரஸின் தொற்றுக்குள்ளானவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். அதாவது ஆரம்பத்தில் சொல்லப்பட்ட அடிக்கடி பிரயாணம் செய்யக்கூடியவர்கள், அதிகமானவர்களை சந்திக்கக் கூடியவர்கள் மத்தியில் பீ சீ ஆர் பரிசோதனை அடிக்கடி செய்யப்பட வேண்டும்.

எழுமாறானபரிசோதனைகள்அவசியமா?

நிச்சயமாக! தொற்றுக்கு ஆளாகக்கூடியவர்கள் மத்தியில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செய்வது சிறப்பானது. அதிகமதிகம் எழுமாறான பரிசோதனைகள் செய்யப்படும் போது தொற்றுக்குள்ளானவர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு தனிமைப்படுத்த இயலுமாகையால், மேற்கொண்டும் பரவாமல் தடுக்கலாம்.

எழுமாறானபரிசோதனைதொடர்பாகசிலசந்தேகங்கள்அண்மைக்காலமாகஎழுப்பப்படுகின்றனவே?

அவை தவறானவை. அடிப்படையான தகவல்களைத் தெரிந்துகொள்ளாமலும், விளக்கமில்லாமலுமே சிலர் அவ்வாறான தவறான கருத்துக்களை சொல்ல விழைகிறார்கள். எல்லாவற்றிலும் அவதானம் இருக்க வேண்டும். ஆனால் அந்தப் பார்வையே திசைமாறி வக்கிரமாகி விடக்கூடாது. நலவான விடயங்கள் கூட கெடுதியாக மாற்றப்பட்டு விடக்கூடாது.

Dr. N. Ariff
Regional Epidemiologist
Office of RDHS
Kalmunai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *