குவைத்தில் இன்று 30 வருடங்களுக்கு பிறகு 7 வீரர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யபட்டது!

கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் 1990 களில் குவைத்- ஈராக் போரின்போது கானாமல் போன குவைத் நாட்டவர்களான 7 வீரர்களின் உடல் பாகங்கள் என DNA அரிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது .

முன்னர் குவைத் உள்துறை அமைச்சகத்தின் தடயவியல் சான்று பொதுத்துறையால் நடத்தப்பட்ட டி.என்.ஏ மரபணு பகுப்பாய்வு மூலம் கண்டறியப்பட்ட இந்த ஏழு வீரர்களின் எச்சங்கள் ஈராக்கிலிருந்து கொண்டு வரப்பட்ட பின்னர் இறுதி மரியாதை நிகழ்வு இன்று நடைபெற்றது. பின்னர் அந்த உடல் பாகங்கள் சுலைபிகாத் மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டு அவர்களுக்காக ஜனாஸா தொழுகையும் நடத்தப்பட்டது

துணை பிரதமர், உள்துறை அமைச்சர், அமைச்சரவை விவகார அமைச்சர் அனஸ் அல்-சலே, மற்றும் துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான அகமது அல் மன்சூர் இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.

இந்த வீரர்களுக்கு கொரோனா காலத்திலும் அதை பொருட்படுத்தாதமல் ஆயிரக்கணக்கான குவைத் மக்கள் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *