முஸ்லிம் சகோதரர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்!

உலக சுகாதார அமைப்பின் அனுமதிக்கமைய முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். இது அரசியல் இலாபத்துக்கோ அல்லது ஒரு இனம், மதத்துக்காக வேண்டிக்கொள்வதல்ல என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இதன்படி ,கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம் சகோதரர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஒரு பெளத்தனாக இருந்து அரசாங்கத்தை கேட்கின்றேன். அரசியல் இலாபத்துக்கோ அல்லது ஒரு இனம், மதத்துக்காக வேண்டிக்கொள்வதல்ல.

உலக சுகாதார அமைப்பு அந்த விடயத்தை அனுமதித்துள்ளதுடன், 200 நாடுகளில் கொரோனாவால் மரணித்தவர்களை அடக்கம் செய்கின்றன. அதனடிப்படையிலே இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

இத்துடன் ,உலக சுகாதார அமைப்பின் கோரிக்கைகளை பின்பற்றுவதில் அரசாங்கம் இரட்டை வேடம் போடுகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை ஏன் இதுவரை கொண்டுவராமல் இருக்கின்றது என நான் அரசாங்கத்திடம் கேட்டபோது, உலக சுகாதார அமைப்பு கொரோனாவுக்கு இதுவரை எந்தவொரு தடுப்பூசியையும் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *