ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இதுவரை ரூ.70 ஆயிரம் மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று (18) இரவு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சுமார் 69 இலட்சம் மக்கள் என்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர். நாட்டை பாதுகாப்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக அமைந்தது.

குறுகிய காலப்பகுதியில் அதனை எம்மால் செய்ய முடிந்தது. தற்போது, நாட்டு மக்கள் எவ்விதத்தில் அச்சப்பட தேவையில்லை.

புலனாய்வு மற்றும் பாதுகாப்பு பிரிவு பலவீனமடைந்த காரணத்தால் நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு தளப்பட்டது.

நான் அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாடடின் பாதுகாப்பு பிரிவிற்கு உரிய அதிகாரிகளை நியமித்து, அவர்களின் பொறுப்பை சரியாக நிறைவேற்ற அதிகாரத்தை பெற்றுக் கொடுத்தேன்.

அதேபோல், வீழ்ச்சியடைந்திருந்த புலனாய்வு பிரிவை மறுசீரமைத்து அதற்கு மீண்டும் புத்துயிர் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, எவ்விதத்திலோ நாட்டினுள் பயங்கரவாதத்திற்கு மீண்டும் தலைதூக்க இருந்த வாய்ப்புகள் எம்மால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *