இலங்கை முழுவதும் கொரோனா தொற்றும் வலயமாக அறிவிப்பு!

தற்போதைய நிலைமையில் முழு நாட்டையும் கொரோனா தொற்றும் வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளதாகவும் எனினும் இயல்பு வாழ்க்கைக்கு ஏதுவான வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களை வழமை போல் இயக்க முடியும். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நிறுவன பிரதானிகளின் கடமை.

அதிகளவான ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் தினமும் சேவைக்கு வரக் கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை பிரதேச சுகாதார அதிகாரிகள் தீர்மானிப்பார்கள்.

இவ்வாறு வரும் ஊழியர்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பேணுவது கட்டாயம் என்பதுடன் அடிக்கடி உடல் உஷ்ணத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *