ஊரடங்கு அனுமதி பத்திரம் தொடர்பான அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று மாலை 6 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரையில் ஊரடங்கு சட்டம் அழுல்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவிப்பு விடுக்க்பட்டுள்ளது.

மேலும், இன்று மாலை வேலையில் தொழில் முடிந்து மற்றும் நீண்ட நேரம் பயணிக்கும் மக்கள் தகுந்த ஆதாரங்களை காட்டி பயணிக்க முடியும் எனவும், அநாவசிய போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாளைய தினத்தில் முழுமையாக ஊரடங்கு சட்ட விதிமுறைகள் அமுல்படுத்தப்படுமெனவும், பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹல் தல்துவ குறிப்பிட்டுள்ளார்

அத்துடன், ரயில் சேவைகள் இன்றைய நாளில் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தபால் ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய ரயில் சேவைகள் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு பின்னரே முன்னெடுக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இதேவேளை, மாலை 6 மணியுடன் பஸ் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, விமான நிலையங்களுக்கு பணிப்பவர்கள் தங்களின் விமான பயண சீட்டுக்களை ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வருகைத்தருவோர் தமது வருகைக்கான பற்று சீட்டுக்களை அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்கு  சட்டம்  அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக பொது மக்கள் பொருட்கொள்வனவு மற்றும் மருந்துக் கொள்வனவிற்காக வர்த்தக நிலையங்களில் வரிசையில்  நிற்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *