கொரோனா தொற்று பெண் பயணித்த பேருந்து விபரம் வெளியீடு!

கொழும்பு – யாழ்ப்பாணம் – புங்குடுதீவு வரை கோரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்  பயணித்த பேருந்து விவரம் அறிவிப்பு

 அந்தப் பேருந்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்தப் பெண்ணுடன் நெருங்கிப் பழகியவர்கள் உடனடியாக சுதா சுகாதார  துறையினரிடம் தொடர்புகொள்ள அவசர கோரிக்கை

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வீடு திரும்பிய பயண ஒழுங்குகளை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

அதனால் அந்தப் பெண் பயணம் செய்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் சமூக அக்கறை கொண்டு சுகாதாரத் துறையுடன் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

⛔கோரோனாவால் பாதிக்கப்பட்ட பெண், கொழும்பு புறக்கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு Ran Silu – WP ND 6500 என்ற பேருந்தில் பயணித்துள்ளார்.
⛔அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஒக்.4) அதிகாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

⛔யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து NP ND 8790 இலக்கமுடைய Matha என்ற பேருந்தில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு புங்குடுதீவை காலை 7 மணிக்குச் சென்றடைந்துள்ளார்.

எனவே கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேற்படி இரண்டு பேருந்துகளிலும் பயணித்தவர்கள் உடனடியாக வடமாகாண சுகாதார திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *