பாகிஸ்தானில் பெய்துவரும் மழை காரணமாக 100 குழந்தைகள் உட்பட 300 பேர் பலி!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்துவரும் கனமழை வெள்ளத்தில் சிக்கி 100 குழுந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடம் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளனர்.
அண்டை நாடனான பாகிஸ்தான் ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவலால் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் இந்த ஆண்டு பருவமழை அந்நாட்டு அரசுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் ஜூன் முதல் பெய்து வரும் கனமழையால் அந்நாட்டில் பல்வேறு நகரங்கள் வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதில் அதிகமான பாதிப்புகளை கைபர் பக்துன்கா, சிந்து, பலூஸ்தான், பஞ்சாப் ஆகிய மாகாணங்கள் சந்தித்துள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த இரண்டு மாதங்களாக பெய்த கனமழை காரணமாக சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் ஊயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடம் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்த பருவ மழையில் சிக்கி 310 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 135 ஆண்கள், 107 குழந்தைகள் மற்றும் 70 பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 136 இறப்புகளுடன் சிந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாகாணமாகும், அதன் பின்னர் கைபர் பக்துன்க்வாவில் 116, பஞ்சாபில் 16, பலுசிஸ்தானில் 21, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 12 மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானில் 11 என உயிரிழப்புகள் பதிவாக்கியுள்ளன.

மேலும் இந்த பருவமழையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி சுமார் 239 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 6 பெண்கள், 142 ஆண்கள் மற்றும் 41 குழந்தைகள் அடங்குவர். அதே நேரத்தில் அங்கு சுமார் 78,521 வீடுகள் மழை வெள்ளத்தால் முற்றிலும் சேதமடைந்துள்ளன. அழிக்கப்பட்டன, 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் குறித்து சரியான நேரத்தில் கணிக்க பாகிஸ்தானுக்கு ஒரு பயனுள்ள டெலிமெட்ரி முறையோ அல்லது நவீன வானிலை முன்னறிவிப்பு ரேடர்களோ இல்லாததே அதிக பாதிப்புகளுக்கு காரணம் என அந்நாடு பேரிடம் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *