கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்தை தாண்டியது
சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.13 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 9,13,257 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் 2,83,16,402 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,03,28,576 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 60,861 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.