தோனி குறித்து பத்து சுவாரஸ்ய தகவல்களை!

தோனி குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

1. அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி. தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி, 2007ல் ஐசிசி உலக டி20 போட்டி, 2011ல் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2013ல் ஐசிசி சேம்பியன்ஸ் கோப்பை ஆகிய 3 போட்டிகளிலும் இந்தியா வென்றது.

2. தோனிக்கு சிறு வயதில் முதலில் பிடித்தமான விளையாட்டு கால்பந்து. அவரது பள்ளி குழுவில் தோனி கோல் கீப்பராக இருந்தார். சென்னையின் எஃப்சி கால்பந்து அணியின் உரிமையாளர் தோனிதான். கால்பந்துக்கு பிறகு அவருக்கு பிடித்தமான விளையாட்டு பேட்மிண்டன்

3. விளையாட்டை தாண்டி மோட்டர் ரேசிங் அவருக்கு பிடித்தமான ஒன்று. மஹி ரேசிங் குழு என்ற குழு ஒன்றை அவர் சொந்தமாக வாங்கியுள்ளார்.

4. அவரது முடி அலங்காரத்திற்கு மிகவும் பெயர் போனவர் தோனி. ஒரு காலத்தில் நீண்ட முடி என்பது அவரது அடையாளமாக இருந்தது. பின்னர் அவர் பல முறை அவரது முடி அலங்காரத்தை மாற்றினார். பாலிவுட் நடிகர் ஜான் அபிரகாமின் தலைமுடி தோனிக்கு மிகவும் பிடிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா

5. 2011ல் இந்திய ராணுவத்தில் லெஃப்டினன்ட் கர்னலாக கெளரவிக்கப்பட்டார். இந்திய ராணுவத்தில் சேருவது அவரது சிறுவயது கனவு என்று தோனி பலமுறை கூறியிருக்கிறார்.

6. ஆக்ராவின் இந்திய ராணுவத்தின் பாரா ரெஜிமெண்டில் இருந்து para jumps நடத்திய முதல் விளையாட்டு நபர் என்ற பெருமையை பெற்றவர் தோனி. அதற்கான பயிற்சி எடுத்துக் கொண்ட அவர், 15,000 அடி உயரத்தில் இருந்து 5 முறை குதித்தார்.

7. மோட்டர் பைக் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் தோனி. இரண்டு டஜன் நவீன மோட்டர் பைக்குகளை அவர் வைத்திருக்கிறார். அதோடு கார்களும் தோனிக்கு மிகவும் பிடிக்கும். ஹம்மர் போன்ற பல மிக விலை உயர்ந்த கார்கள் அவரிடம் உள்ளது.

8. பல பிரபல நடிகைகளோடு திருமணம் நடக்கப்போவதாக தோனி குறித்து பல செய்திகள் வெளியானது ஆனால் 2010ஆம் ஆண்டு டெஹ்ராடுனின் சாக்ஷி ராவத்தை அவர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜிவா என்ற பெண் குழுந்தை உள்ளது.

9. முதலில் இந்திய ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக தோனிக்கு வேலை கிடைத்தது. அதன்பிறகு அவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

10. உலகளவில் மிகவும் அதிக ஊதியம் பெற்ற கிரிக்கெட் வீரர் தோனி. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முன் அவரது சராசரி ஆண்டு வருமானம் 150ல் இருந்து 190 கோடியாக இருந்தது. தற்போதும் இந்த ஊதியத்தில் பெரும் மாற்றம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *