பாராளுமன்ற தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் வாரிசு அரசியல்!

எதிர்வரும் 5 ம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை நடாத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வரும் நிலையில் நீங்களும் நாங்களும் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.

2019 ம் ஆண்டில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் படி 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 இலங்கை குடிமக்கள் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.

2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் 12 லட்சத்து 19 ஆயிரத்து 395 புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர்களில் 31.95 வீதமானோர் 18 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும், 1.67 வீதமானோர்,  முதல் தடவையாக வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்கள் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இதன் காரணத்தாலேயே சமூக வலைத்தளங்களில் அதிகளவான பணம் செலவு செய்து வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கின்றமையும் நோக்கத்தக்கது.

இந்தத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களைக் கொண்ட மாவட்டம் கம்பாஹா மாவட்டமாகும் .
கம்பாஹா மாவட்டத்தில் 17 லட்சத்து 85 ஆயிரத்து 964 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

குறைந்த வாக்காளர்களைக் கொண்ட மாவட்டம் வன்னி தேர்தல் மாவட்டமாகும்.(வவுனியா, முல்லைத்தீவு, மன்னார்)

அதிக எண்ணிக்கையான உறுப்பினர்கள் தேர்வாகவுள்ள மாவட்டம் கொழும்பு (19 ), குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள்  கொண்ட மாவட்டம் திருக்கோணமலை (04 )

2019 தேர்தல் பதிவேட்டின் படி, காலி மாவட்டத்தின் உறுப்பினர்களது எண்ணிக்கை 10 லிருந்து 9 ஆக குறைந்துவிட்டது. இதற்கிடையில், பதுளை மாவட்டத்தில் இருந்து உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 லிருந்து 9 ஆக உயர்ந்துள்ளது.

வாரிசு அரசியல்..!  狼狼狼狼狼

இதைவிடவும் கடந்த இலங்கையின் நாடாளுமன்ற அரசியலில் வாரிசு அரசியல் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதனையும் உங்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

ஆள்பவர்கள் தொடர்ந்து ஆள்பவர்களாகவும், அடிமைகளாக வாக்களிப்பவர்கள் தொடர்ந்தும் அடிமைகளாக உரிமைகளுக்காக போராடும் மக்களாகவுமே இலங்கையின் ஜனநாயக அரசியல்  அரங்கில்  காணப்படுகின்றனர்.
கடந்த நாடாளுமன்றில் 71 உறுப்பினர்கள் நாடாளுமன்றில், மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபைகளில் குறைந்தது ஒரு உடனடி குடும்ப உறுப்பினரையாவது கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து நமது நாட்டில் வாரிசு அரசியல் எவ்வளவு தாக்கம் செலுத்துகிறது என்பது புலனாகின்றது.

10 பேர் மூன்றாம் தலைமுறை உறுப்பினர்களாக இருக்கின்றனர், அதாவது இப்போது உறுப்பினராக இருக்கும் ஒருவர் அவரது தந்தையையும், தந்தையின் தந்தையையும் உறுப்பினராக கொண்டிருக்கிறார்கள்..
09 பேருக்கு மாகாண சபைகளில் மகன்கள் இருக்கின்றார்கள்,
32 பேர் முன்னாள் உறுப்பினர்களின் பிள்ளைகள் 

2 தந்தை மற்றும் மகன் இருவரும் கடந்த நாடாளுமன்றில் உறுப்பினர்கள், 04 ஜோடி சகோதரர்கள் நாடாளுமன்றத்தை அலங்கரித்திருக்கிறார்கள் ,முன்னாள் முதலமைச்சர்களின் மகன்கள் 03 பேர். 04 உறுப்பினர்கள் முன்னாள் அல்லது தற்போதைய MP களின் மருமகன்கள் 01 திருமணமான தம்பதிகள் நாடாளுமன்றில் அங்கத்துவம் பெற்றிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *