கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட அறிவித்தல்!

தற்போதுள்ள கொரோனா வைரசு பரவல் சூழ்நிலை காரணமாக, சிகிச்சைகளுக்கு Clinic சமூகமளிக்க முடியாமற்போன நோயாளர்கள், தொலைபேசியினூடாகத் தொடர்பு கொண்டு அதற்கான திகதியை முன்கூட்டியே ஒதுக்கிக் கொள்ளுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த தொலைபேசி இலக்கங்களை இதற்காகப் பயன்படுத்த முடியுமென தேசிய வைத்தியசாலையின் உதவிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நோயாளர்கள் அடுத்த சிகிச்சைக்கான தினத்தைத்தைஒழுங்கு செய்துக்கொள்ள முடியும்.தேசிய வைத்தியசாலையின் பொது தொலைபேசி இலக்கத்தினூடாகவும் இதுதொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

சிகிச்சை பிரிவுகள் மற்றும் தொடர்பு கொள்ளக் கூடிய தொலைபேசி இலக்கங்கள் பினவருமாறு:

இருதய நோய் சிகிச்சைப் பிரிவு

011 36 18 727
011 36 18 728
011 36 18 736
011 36 18 730
011 36 18 735

நரம்பியல் சிகிச்சைப் பிரிவு

011 36 18 754

வலி நிவாரண சிகிச்சைப் பிரிவு

011 36 18 762

வாதவியல் (முடவியல்) சிகிச்சைப் பிரிவு (பொதுவான)

011 36 18 538

வாதவியல் சிகிச்சைப் பிரிவு (விசேட)

011 36 18 770

அறுவை சிகிச்சை மற்றும் தோள்பட்டை அறுவை சிகிச்சைப் பிரிவு (அறை 17)

011 36 18 718

அறுவை சிகிச்சை மற்றும் செல்குழாய்நாளஞ் சார்ந்த vascular சிகிச்சைப் பிரிவு (அறை 19)

011 36 18 719

சர்மம் சார்ந்த சிகிச்சைப் பிரிவு (அறை 25)

011 36 18 746

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *