தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் அதிகரிப்பு?

பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் ஒரு மணிநேரத்தால் நீடிக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

இதன்படி காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்கெடுப்பு இடம்பெறலாம் என தெரியவருகின்றது.

வழமையாக காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை 9 மணிநேரமே வாக்களிப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

எனினும், இம்முறை சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தேர்தல் நடைபெறவுள்ளதாலேயே இந்த முடிவு எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரிடம் வினவியபோது,

” இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை. ஆனால், அதிகரிக்கவேண்டி வரலாம்.” – என பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *