தொண்டமானின் அமைச்சுப் பதவி மஹிந்தவிடம்
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டிருந்த சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை பொதுத்தேர்தல் முடிவடையும்வரை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ச தீர்மானித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை மேற்படி அமைச்சு பதவியை மஹிந்த பதவிப்பிரமாணத்துடன் பொறுப்பேற்கவுள்ளார் என அறியமுடிகின்றது.