தமிழகத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் இலங்கையில் பாதிப்பு

வர்த்தக நோக்கத்தோடு இலங்கைக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் சிக்கியுள்ளதாக இந்தியாவின் ‘த இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் மாதம் நடைபெற்ற கச்சதீவு தேவாலய திருவிழாவின்போது தமிழகத்தின் சின்னலபட்டி, நீலகோட்டை, குண்டலபட்டி, அனாய்பட்டி உள்ளிட்ட பகுதிளைச் சேர்ந்த புடவை வணிகர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

இவ்வாறு இலங்கை வந்த தமிழக வணிகர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இரண்டு மாத காலமளவில் தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வணிகர் ஒருவர் இவ்வாறு தெரிவித்ததாக த இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந் நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக வெளிநாட்டு பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது சிக்கித் தவிக்கின்றனர்.

இதனிடையே விருது நகரிலிருந்து வருகை தந்த வர்த்தகர்கள் குழுவொன்று இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் உதவியை நாடியுள்ளமையினால் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில், உதவி கோரிய விருதுநகரில் இருந்து வருகை தந்துள்ள வர்த்தகர்கள் குழு ஒன்றுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறான வர்த்தகர்களுக்கு உதவுவதாற்கான நடவடிக்கையையும் உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுத்துள்ளது.

இலங்கையின் சிறந்த சுற்றுலா மூல சந்தைகளில் இந்தியாவும் ஒன்று, கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் இந்தியாவிலிருந்து 35,309 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *