கொரோனா வைரஸ் தடுப்புக்காக 70 வகையான மருந்துகள் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் தடுப்புக்காக 70 விதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொடிய தொற்று நோயான கொரோனாவிற்கு இதுவரை 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மிகவும் எளிதாக இந்த கொரோனா தொற்று பரவுவதால் அனைத்து நாடுகளும் இதனை தடுப்பதற்கான தடுப்பூசியை எதிர்பார்த்துக் உள்ளனர். சில நாடுகளில் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்றைத தடுக்கும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல குழுவினர் இறுதிக்கட்ட பரிசோதனைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் கொரோனாவுக்கு 70 விதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றுவருவதாகக் கூறியுள்ளது. குறிப்பாக, மூன்று மருந்துகள் மனிதர்களுக்கே கொடுத்து சோதிக்கும் கட்டத்துக்கு முன்னேறியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.ஹாங்காங்கைச் சேர்ந்த கேன்சினோ (CanSino) நிறுவனமும் பீஜிங் உயிர்தொழில்நுட்பவியல் நிறுவனமும் இணைந்து தயாரித்த மருந்து மனிதர்களுக்குக் கொடுத்துப்பார்க்கும் கட்டத்தில் உள்ளது. இதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த இரு நிறுவனங்களின் மருந்துகளும் இந்தக கட்டத்துக்கு வந்துள்ளன.நம்பகமான மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், அது அடுத்த ஆண்டே சந்தைக்கு வரலாம் அல்லது 10 முதல் 15 ஆண்டுகள்கூட ஆகலாம் என மருந்து தயாரிப்புத் துறையில் உள்ளவர்கள் கருதுகின்றனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *