ஊரடங்கால் உண்ண உணவில்லாமல் ஐந்து குழந்தைகளை கங்கையில் வீசிய தாய்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் நிறைவு பெறவுள்ளது. இந்த நிலையில், வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆகையால் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பிரதமரிடம் ஊரடங்கை ஏப்ரல் 30 வரையிலாவது நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒடிசா, பஞ்சாப், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தத்தம் மாநில அரசே ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்படி இருக்கையில், இன்று பிரதமர் மோடி ஊரடங்கு குறித்து பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கால் உண்ண உணவில்லாமல் 5 குழந்தைகளை கங்கையில் வீசிய தாய் – உத்தர பிரதேசத்தில் நடந்த சோகம்!
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக வேலையில்லாததால் தவித்து வந்த தாய் ஒருவர் தன்னுடைய 5 குழந்தைகளையும் கங்கை நதியில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதொஹி மாவட்டத்தின் ஜஹாங்கிரபாத் பகுதியைச் சேர்ந்தவர் அந்த பெண்.
தினக்கூலித் தொழிலை செய்து வந்த அவருக்கு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் கையில் பணம் இல்லாமல், அடுத்த வேளை உண்பதற்கு உணவும் இல்லாமல் கடுமையாக அவதியுற்று வந்திருக்கிறார். இதனால் விரக்தியடைந்த அந்த தாய் தனது குழந்தைகளை கங்கை நதியில் மூழ்கடித்திருக்கிறார்.

கொரோனா ஊரடங்கால் உண்ண உணவில்லாமல் 5 குழந்தைகளை கங்கையில் வீசிய தாய் – உத்தர பிரதேசத்தில் நடந்த சோகம்!
இது தொடர்பாக தகவல் அறிந்த அப்பகுதி போலீஸார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதேச்சமயத்தில் குழந்தைகளை கங்கையில் வீசிய குற்றத்திற்காக அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஊரடங்கு வைரஸ் பரவாமல் இருப்பதற்கான சாதகங்களை கொண்டிருந்தாலும், அன்றாடம் பிழைப்பை நம்பியே வாழ்க்கை ஓட்டிவரும் தினக் கூலித் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய பாதகங்களையே உண்டாக்கியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *