அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.08 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 108,770 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,779,099 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 402,709 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 50,584 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,529 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 653 பேர் குணமடைந்தனர்.  
  • தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969- ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
  • இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 19,468 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 152,271 ஆக உயர்ந்துள்ளது.
  • அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 20,577 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 532,879 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,830 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 16,606 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 163,027-ஆக அதிகரித்துள்ளது.
  • பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,875 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,991 ஆக உயர்ந்துள்ளது.  
  • பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13,832 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஈரானில் 4,357 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • சீனாவில் 3,339 பேரும், ஜெர்மனியில் 2,871 பேரும், பெல்ஜியத்தில் 3,346 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
  • நெதர்லாந்து 2,643 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் 1,101 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,036 பேரும், பிரேசில் நாட்டில் 1,140 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.
  • சீனாவில் 82,052 பேருக்கும், ஜெர்மனியில் 125,452 பேருக்கும், பிரான்சில் 129,654 பேருக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • பிரான்ஸில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 635 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • பிரிட்டனில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 917 பேர் உயிரிழந்துள்ளனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *