அநியாயங்களை செய்து இப்ப அடக்க முடியாமல் தடுமாறும் அமெரிக்கா

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சராக இருந்த ஆர்தர் பால்போர் 1917 நவம்பர் 2 ல் எழுதிய ‘பலஸ்தீன மண்ணில் யூத பூமியை உருவாக்க வேண்டும்” என்ற அறிக்கையே 1948ல் பல இலட்சக்கணக்கான பலஸ்தீனர்கள் தங்களது சொந்த பூமியைவிட்டும் வெளியேற்றப்பட காரணமாக இருந்தது, அன்று துவக்கி வைக்கப்பட்ட அநீதி அதன் உச்சத்தை தொட்டது 2020ல் தான். இஸ்ரேல் பிரதமரின் நெருங்கிய நண்பரான டொனால் டிரம்பின் ஆட்சியில் ”இந் நூற்றாண்டின் ஒப்பந்தம்” அல்லது ”டிரம்பின் சமாதான ஒப்பந்தம்” என்ற பெயரில் பலஸ்தீன மக்களின் அடிப்படை மனித, மத உரிமைகள் மீண்டும் கேள்விக்குட்படுத்தப்பட்டது. மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருக்கும் ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலை நகராக ஆக்குவதே இவ் ஒப்பந்தத்தின் பிரதான குறிக்கோளாகும். இதனை 2020 ஜனவரி 28ல் டிரம்ப் பகிரங்மாக அறிவிப்புச்செய்தார். இதற்குப் பெயர் சமாதான ஒப்பந்தமல்ல, மாறாக பலஸ்தீனர்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்குமெதிரான சதி ஒப்பந்தமாகும். மனிதத் தன்மை இருக்கும் எந்த ஜீவனாலும் இப்படியொரு அநியாயத்தை சகிக்க முடியாது, பல்லாயிரம் வருடங்கள் ஒடுக்கட்ட சமூகம் தமக்கு நீதி கிடைக்காதா என ஏங்கி தவித்துக்கொண்டிருக்கையில் அநீதிக்கு மேல் அநீதியிழைக்கப்பட்டால் எப்படி சகிக்க முடியும்???

குறித்த தினத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர்  சந்திப்பில், வழமை போன்று இஸ்லாமிய தீவிரவாதத்தை கடுமையாக சாடினார் டிரம்ப், அவரால் அறிவிக்கப்பட்ட அநீதியான ஒப்பந்தத்தை பலஸ்தீனமும் மத்திய கிழக்கு நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆணவத் தொனியில் கட்டளை விடுத்தார், இதற்கு நிகராக பலஸ்தீன மக்களுக்கு பிச்சை போடுவதாகவும் குமுரினார், இந்த மாநாட்டை அடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் ”இஸ்ரேலோடும் யூத மக்களோடும் எப்போதும் தான் கை கோர்த்திருப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது வரலாற்றுத் தாய்நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கான வாழ்வுரிமை போன்றவற்றை தான் உறுதிப்படுத்துவதாகவும்” தெரிவித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் பதிலுக்குப் பேசிய ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தின் பிரதமர் நெத்நியாஹு ”வெள்ளை மாளிகையிலிருந்து வந்த தலைவர்களில் டிரம்பே எமக்கு மிக நெருக்கமான மகத்தான நண்பரெனவும், இதற்கு முன்னர் எந்த தலைவரும் டிரம்பைப் போன்று மிக நெருக்கமாக இருக்கவில்லை” என்றும் போற்றிப் புகழ்ந்தார்

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல் நொந்து போயிருக்கும் மக்களை மீண்டும் மீண்டும் நோகடிக்கச்செய்யும் இந்த நாசகார ஒப்பந்தப்பிரகடனத்தை தொடர்ந்து கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கிறார் டிரம்ப்.

கொரோனாவுக்குப் பின்னர் அமெரிக்காவின் பொருளாதார நிலை என்னவாகுமோ என்ற பயம் அவரை உலுக்கிப்போட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னால் அவர் பேசிய ஆணவப் பேச்சென்ன!!! இப்போது கூனிக்குறுகி நாலாக மடிந்து உலகின் அனுதாபத்தை தேடும் பேச்சென்ன!!!
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரும், வணிக நிபுணருமான மைக் ஹிக்ஸ் ”கொரோனா, அமெரிக்காவை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவிடுமெனவும், உரிய பாதுகப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் அதனை எதிர் கொள்வதற்கு 7 ரில்லியன் டொலர் அளவில் தேவைப்படலாம் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

எது எப்படியோ சில மாதங்களுக்கு முன் கற்பனையில் கூட நினைத்துப்பார்த்திராத பல நிகழ்வுகள் எம் கண் முன்னே அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. அனைத்துக்கும் இறைவன் போதுமானவன். அவனே சூழ்ச்சியாளர்களுக்கௌ;ளாம் சூழ்ச்சியாளன், பூமியில் மனித நீதியின் கதவு மூடப்பட்டால் வானத்தில் இறை நீதியின் கதவு திறக்கப்பட்டுவிடும், அதன் பிடி கடுமையாகத்தான் இருக்கும்.
நல்லோர்களை இறைவன் பாதுகாத்து அநியாயக்காரர்களை பின்வருவோருக்கு படிப்பினையாக ஆக்குவதற்கு பிரார்த்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *