கொரோனா உங்களை நெருங்காது யாழ்.பத்திரிகையில் பிரசுரமான விளம்பரத்தால் மஹிந்த அதிருப்தி

நாட்டில் நாம் அனைவரும் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பத்திரிகையொன்றில் ‘கொரோனா உங்களை நெருங்காது’ என்று விளம்பரம் வெளியாகியுள்ளது. எதிர்காலத்தில் பத்திரிகைகளில் இவ்வாறான விளம்பரங்கள் வெளியிடப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என்று வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் மேலும் கூறியதாவது :

மேற்குறிப்பிட்ட விளம்பரத்திற்கு அமைய இலக்கம் 14, ராசாவத்தை, யாழ்ப்பாணம் – சுதுமலை வீதி மானிப்பாய் என்ற இடத்தில் மதபோதனைக் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த மத போதனைக் கூட்டத்திலிருந்தே யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டுள்ளனர்.

பத்திரிகைகளில் இவ்வாறான அறிவித்தல்கள் வெளிவருவதற்கு இடமளிக்க வேண்டாம் என்று வடக்கை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். இந்த பத்திரிகையின் உரிமையாளர் யார் என்பது எனக்குத் தெரியாது. எனவே இவ்வாறானவர்களிடம் இது பற்றி தெளிவுபடுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *