இராகலை ஐவர் பலியான சம்பவத்தில் பெற்றோல் பயன்படுத்தியமை உறுதி!

ஐந்து உயிர்களை காவு கொண்ட இராகலை தீ விபத்து சம்பவத்தில் பொற்ரோல் பாவிக்கப்பட்டள்ளதாக அரசாங்க  இராசயண பகுப்பாய்வு பிரிவு அறிக்கையை  இராகலை பொலிசார் வலப்பனை நீதிமன்றத்தில் சமர்பிப்பித்துள்ளனர்.

குறித்த தீப்பிடிப்பு சம்பவத்தில் பெற்றோல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, குறித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை தோட்டம் இலக்கம் ஒன்று மத்திய பிரிவு தோட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் (07) இரவு  வீடொன்று தீக்கிரையான சம்பவம் இடம்பெற்றது.

இந்த விபத்து சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் உயிரிழந்திருந்தனர்.

இச்சம்பவத்தில் குறித்த குடும்பத்தை சேர்ந்த தங்கையா இரவீந்திரன் வயது (27) என்பவர் உயிர் தப்பியிருந்தார்.

இவ்வாறு உயிர் தப்பியிருந்த நபரை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்  இராகலை பொலிசார் கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி கைது  செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டிருந்த இவரை அன்றைய தினம் மாலை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி டி.ஆர்.எஸ். ஜினதாச முன்னிலையில் இராகலை பொலிசார் ஆஜர் செய்திருந்தனர்.

இதன்போது வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்ட வலப்பனை நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.ஆர்.எஸ். ஜினதாச சந்தேகநபரை 14 நாட்கள் (25.10.2021) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இதனடிப்படையில் மீண்டும் சந்தேக நபரை கடந்த (25.10.2021) அன்று மன்றில் ஆஜர் செய்திருந்தனர்.

இதன்போது சந்தேகநபருக்கு மேலும் 14 நாட்களுக்கு விளக்க மறியலை நீட்டித்த நீதவான் சந்தேகநபரை நேற்று (08) திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக்கும்படி
உத்தரவிட்டிருந்தார்.

அதேநேரத்தில் குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பில் அரசாங்க இரசாயண பகுப்பாய்வு பிரிவினரால் பெறப்பட்டிருந்த தடயவியல் பகுப்பாய்வு அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதன் பிரகாரம் சம்பவத்தில் உயிரிழந்திருந்த
இராமையா தங்கையா (61), செவனு முத்துலெட்சுமி (57), மகளான தங்கையா நதியா (34), இவரின் முதல் கணவரின் பிள்ளையான சத்தியநாதன் துவாகரன் (13) மற்றும் தற்போதைய கணவரின் பிள்ளையான மோகனதாஸ் எரோசன் (01)
ஆகியோரின் பிரேத பரிசோதணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை நேற்று (08) நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு இராகலை பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் இந்த  சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை
நுவரெலியா மாவட்டம் வலப்பனை நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.ஆர்.எஸ். ஜினதாச முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த  வழக்கு விசாரணையின் போது  சந்தேகநபரான தங்கையா இரவீந்திரனை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பதுளை சிறைச்சாலையில் இருந்து அழைத்து வர முடியாமல் இருந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அதே நேரத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அரசாங்க இரசாயன பகுப்பாய்வு பிரிவினரால் வழங்கப்பட்டிருந்த பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் பிரேத பரிசோதணை அறிக்கைகளை இராகலை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் நீதிமன்றத்தில் சமர்பித்திருந்தனர்.

இவ்வறிக்கையில் பெற்றோல் பாவிக்கப்பட்டு இந்த தீ பற்றல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளதாகவும் கண்டறியப்பட்ட இரசாயன பகுப்பாய்வு அறிக்கை மற்றும் சட்டவைத்தியர் அறிக்கை  ஆகியவை தமக்கு கிடைக்கப்பெற்றதாக மன்றில் தெரிவித்த பொலிசார் அதனை நீதவானின் பார்வைக்கும் சமர்ப்பித்தனர்.

இதன்போது குறித்த ஆவணங்களை பரிசோதித்து ஏற்றுக்கொண்ட நீதவான் சம்பவம் தொடர்பில் மேலும் அவணங்கள் பெறவிருப்பின் அவைகளையும்,சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகளையும் மன்றில் சமர்பிக்க பொலிசாருக்கு உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்தி வைப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *