கொலைவெறி கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 40000ஐ தாண்டியது

உலக நாடுகள் முழுவதையும் உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுதும் பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. நாளாந்த உயிரிழப்பு எண்ணிக்கை 19 வீதமாகியுள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 824,529 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இவர்களில் 609,498 சிகிச்சை பெற்றுவருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 174,359
பேர் குணமடைந்துள்ளனர்.