கொரோனா வைரஸை பரப்பிய சீனா எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மூலிகை மருத்துவம்
பாரம்பரிய மருத்துவத்தால் தலைநிமிர்ந்த சீனா!
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும் என்ற ஒரே கேள்விதான் உலகம் முழுவதும் கேட்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் தனிமையையும் ஏற்படுத்தியுள்ளது. சீனா மற்றும் தென்கொரியாவில் இயல்பு நிலை மெல்ல திரும்பிவருவது நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

அமெரிக்காவில் தடுப்பு மருத்து தயாரிக்கப்பட்டு, 45 தன்னார்வலர்களிடம் செலுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியுள்ளது.
முன்னதாக விலங்குகளுக்கும் மருந்து செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைகள் வெற்றிபெற்றால் கொரோனாவுக்கு மருந்து கிடைத்துவிடும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த நிலையில், சீனாவில் முதன்முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட வுஹான் மாகாணம் கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பது இப்போது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சிக்கு சீன வானொலியில் தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் தமிழ்ப் பேசும் சீனப் பெண் இலக்கியா அளித்த பேட்டியில், சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரம்பரிய மூலிகை மருத்துவம் அளிக்கப்பட்டதாகவும், அதன் மூலம் பலரும் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சீனாவில் இருந்து பாரம்பரிய மூலிகை மருந்துகள் கொரோனா பாதிக்கப்பட்ட கனடா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுவதாகவும் இலக்கியா குறிப்பிட்டார்.
ஏற்கெனவே, இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பாரம்பரிய மூலிகை மருந்துகளைக் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முயற்சி செய்யலாம் என பாரம்பரிய மருத்துவர்கள் குரல் கொடுத்துவருகின்றனர்.

தற்போது விரைவான நோய்ப்பரவலைத் தடுப்பதற்கு பாதித்த நபர்களைத் தனிமைப்படுத்துவதும், மற்றவர்கள் ஒன்றுகூடலைத் தடுப்பதுமே வழியாக இருக்கும்.
அதனால்தான் உலகம் முழுவதும் மக்கள் அதிகம் செல்லும் மால்கள், தியேட்டர்கள், திருமண மண்டபங்கள், ஜவுளி ஸ்டோர்கள், சூப்பர் ஸ்டோர்கள் போன்றவை மூடப்பட்டுவருகின்றன.

ஆங்கில தடுப்பு மருந்துகள் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களைப் பாதிப்பற்ற முறையில் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு அடையாளம் காட்டும் பணியைச் செய்கின்றன.
நோய்க்குக் காரணமாகும் வைரசைக்கொண்டே தடுப்பு மருந்துகளை உருவாக்கும் முறையே பல ஆண்டுகளாக நடைமுறையில்  இருந்துவருகிறது.

உலகின் சிறந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கின்றனா்.
இந்நிலையில், சீனாவில் பாரம்பரிய மூலிகைகளைக் கொண்டே கொரோனா வைரஸை துரத்தியடித்திருப்பது நோயில் இருந்து மீளமுடியும் என்ற அழுத்தமான நம்பிக்கையை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியிருக்கிறத

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *