இலங்கையில் கொரோனா வைரஸ் குறித்து ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
கொரோனா வைரஸ் நோய் குறித்து, ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்வதில் புத்திசாலித்தனமாகவும் விழிப்பாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படவேண்டும் என விசேட வைத்தியர் திருமதி பிரியங்கா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
உலகில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“ கொரோனா வைரஸ் தொற்றானது, வெப்பநிலையில் அதிகரிக்கின்றதா? குறைகின்றதா? என்பது குறித்து விஞ்ஞான ரீதியில் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை. எனவே கொரோனா வைரஸ் நோய் குறித்து, ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்வதில் புத்திசாலித்தனமாக செயல்படவேண்டும்.
கொரோனா வைரஸ் பெரும்பாலானோருக்கு பொதுவான நோய் நிலைமையாக ஏற்படக்கூடியது. சிலருக்கு சிக்கலைக்கொண்டதாக ஏற்படக்கூடும்.
சிலருக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அனர்த்த வலயத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் அவதானத்துடன் செயற்படவேண்டும்.
இதேவேளை, கொரோனா வைரஸ் இருமல், தும்மலின் போதும் வெளியேறும் எச்சில் மூலமும் பரவக்கூடும். காற்றின் மூலம் இது பரவக்கூடிய தன்மை மிகவும் குறைவானதாகும்” என்றார்
