இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார சூப்பர் கார்

இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் மின்சார சூப்பர் காரான வேகா, சுவிட்சர்லாந்தில் நடந்த ஜெனீவா சர்வதேச மோட்டார் கண்காட்சி 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கை வரலாற்றில், உள்நாட்டில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட முதல் வாகனம் ஆகும்.
கோட்ஜென் இன்டர்நஷனல் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான வேகா இந்த காரை வடிவமைத்தது.இந்த ஓல்-எலக்ட்ரிக் சூப்பர் கார் 804HP மற்றும் 720NM முறுக்குவிசை வழங்கும் இரட்டை மோட்டார் ஓல்-வீல்-டிரைவ் டிரைவ்டிரெய்ன் மூலம் இயக்கப்படுகிறது.
40 கிலோவாட் பட்டரி-பக் மூலம் இயங்குகிறது. இந்த வாகனத்தின் சோதனையின்போது, 3.1 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டியது.
250 கிமீ வேகத்தை கொண்ட இந்த கார், இரண்டு இருக்கைகள் கொண்டது. சூப்பர் கார் மேம்பட்ட பலதரப்பட்ட தொழில்நுட்ப பயன்பாடுகளையும் கொண்டது.
இலகுரக கார்பன் ஃபைபரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *