4 பயங்கரவாத அமைப்புக்களுடன் உலமா சபைக்கு நேரடித் தொடர்பு! – கண்டி மாநாட்டில் போட்டுத்தாக்கினார் ஞானசார தேரர்

“இலங்கை உலமா சபை 4 பயங்கரவாத அமைப்புக்களுடன் நேரடித் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படியே சென்றால் நாட்டில் இருந்து நீங்கள் செல்ல வேண்டி வரலாம் என நான் கூறிவைக்க விரும்புகின்றேன்.”

– இவ்வாறு கண்டியில் இன்று நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் மாநாட்டில் அதன் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“சம்பிரதாய முஸ்லிம்கள் எவ்வளவு மாறியிருக்கின்றார்கள் என்பதை அண்மைய தாக்குதல்களில் அறிந்துகொண்டோம். கடந்த காலங்களில் விட்ட எச்சரிக்கைகளைப் பற்றிப் பேசாமல் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிக்க நாம் செயற்பட வேண்டும்.

இன்று ஒரு பக்கம் சோபா ஒப்பந்தத்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி. மறுபக்கம் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் செயற்பாடு, இன்னொருபக்கம் பலம்வாய்ந்த உலக நாடுகளின் புலனாய்வுச் சேவைகள் நமது நாட்டை கூறுபோட செயற்படும் நடவடிக்கை என்று பல பிரச்சினைகள்.

நாம் உலமா சபையுடன் கவனமாக இருக்க வேண்டும். உலமாக்களுடன் பேசுவதை அரச தலைவர்கள் நிறுத்த வேண்டும். சுபி முஸ்லிம்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு அவர்களுடன் பேச வேண்டும். அல் – தக்கியா என்ற போர்வையில் உலமா சபை செயற்படுகின்றது.

உலமா சபைக்கு இன்று பயங்கரவாதத்துடன் நேரடித் தொடர்பு உள்ளது. அவர்கள் இந்தோனேசியா , மலேசியா , இந்தியா போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளனர். 4 அமைப்புக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளனர்.

இங்கே 40 வகையான மொழிபெயர்ப்புக்களுடன் குரான் உள்ளது.1950 ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு குர் ஆன் உள்ளது. அந்த குர் ஆன் ஓரங்கட்டப்பட்டுள்ளது.

அரசுக்குள்ளே அரசு, சட்டத்திற்குள்ளே சட்டம், நீதிமன்றத்திற்கு வெளியே காதி சட்டம் என வெவ்வேறான சட்டங்கள் உள்ளன.

எந்த அரசு வந்தாலும் வஹாபிவாதிகள் அதில் உள்ளனர். அட்டுலுகமவில் இன்று தப்லீக் ஜமாத் செயற்படுகின்றது.

தலைக்கு மேலே பறந்து சென்றாலும் தலையில் கூடு கட்ட நாம் விட மாட்டோம். உலமாக்கள் இங்கு வெளியேறும் காலம் வெகு தொலைவில் இல்லை. இப்படியே சென்றால் நீங்கள் இங்கு இருக்க முடியாது. உலமாக்களின் கொஞ்ச வாக்குகளுக்காக எமது அரசியல்வாதிகள் அலைகின்றனர்” – என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *