அனைத்து மக்கள் மீதும் அக்கறை கொண்டவர் அமைச்சர் ரிஷாத்; அவரை அசைக்க முடியாது – இஸ்மாயில் எம்.பி. தெரிவிப்பு

இனவாத வஞ்சகர்கள் இடும் விதைகளுக்கு முஸ்லிம் சமூகமும், தலைமைத்துவங்களும் பலிக்கேடயமாவது, வெண் நெய்யில் மெழுகு பூசுவதைப் போன்றாகும் – என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரனையை எதிர்த்து வெளியிட்டு ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த ஈஸ்டர் ஞயிறு தினத்தன்று முஸ்லிம் பெயர் தாங்கிய சில விஷம வெளிநாட்டு கை பொம்மைகளின் மிலேச்சத்தனமான செயலை இந் நாட்டு முஸ்லிம் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வன்மையாக கண்டிக்கின்றனர்.

இச் சந்தர்ப்பத்தை சாதகமாக்கிய சிலர், இன்னும் இன்னும் இனவாத முறுகல்களை வளர்த்துவிட எத்தணிக்கின்றனர். அவ்வாறு அவர்கள் மேற்கொள்கின்ற விஷமத் தூண்டுதல்களால் எமது நாட்டின் ஐக்கியமும், பொருளாதாரமும் பின்தங்கியே செல்லும் அவல நிலை வலுக்கின்றன.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தற்போதைய காலகட்டத்தில் பெருமளவு மக்கள் அலையோடு பல அமைச்சுக்களையும் தாங்கிய வண்ணம் சேவை பொழிகின்ற நிலைமை நாடாளுமன்றிலுள்ள பலருக்கும் கண் குற்றே!.

இதை ஒரு பிடியாக கழுகுப் பார்வை கொண்டவர்கள் இச் சந்தர்ப்பத்தை காய்நகர்த்த எத்தணித்துள்ளனர். ஒரு தனிபர் மீது கொண்டு வருகின்ற பிரேரணைகள் அவர்மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இரைக்கு நோக்கிய புறாவின் கதை போலுள்ளது.

அமைச்சர் ரிஷாட் மீதான 10 குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய பத்திரம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் அக் குற்றச்சாட்டுக்கள் குறித்த எவ்வித விசாரணைகளுமோ அல்லது கேள்விகளோ குறித்த நிறுவனங்களின் தலைவர்கள், சட்டவல்லுநர்கள் ஊடாக மேற்கொள்ளப்படவில்லை.

அப்படியாயின் போலிக் குற்றச்சாட்டுக்களின் மூலம் அமைச்சரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதற்காகவே இவர்கள் இவ்வாறானதொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இது ஒரு சிலரின் பல நாள் கனவு, அதை நனவாக்க இக்கால கட்டத்தை சுவைக்கின்றனர்.
பராளுமன்றில் உள்ள அனைவரும் இனவாத கருத்துடையவர்கள் அல்ல என்பதை தௌவாக நாங்கள் உணர்ந்துள்ளோம். மக்கள் மனதில் நல்லிடம் கொண்ட, சேவை சிந்தனையுடைய, அபிவிருத்தி வல்லுனர்கள் பலர் உள்ளனர்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட பிரேரனை வெறுமெனே அமைச்சர் மீதும், எமது சமூகத்தின் மீதும் இழுக்கை ஏற்படுத்தக்கூடிய அரசியல் திருவிளையாடல் என்றுதான் கூறவேண்டும்.
பல ஆண்டுகளாக கைத் தொழில் அமைச்சுடன் இன்னும் பல அமைச்சுக்களை வகித்து வில்பத்து முதல் எத்தனையோ சமூகப் பிரச்சினைகளை முன்னின்று குரல் கொடுக்கும் அரசியல் ஜாம்பவனாக மிளிருகின்ற அமைச்சர் ரிஷாத் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களே இவ்வாறு போலித் திட்டம் வரைந்துள்ளனர்.

எது எவ்வாறாயினும் உண்மையும், நேர்மையும் என்றும் வெல்லும். வெறும் அரசியல் நாடகம் அரங்கேற்றுவதற்காக ஒரு சிலரால் விதைக்கப்படுகின்ற இப்படியான சந்தர்ப்பவாத சுக போகங்கள் என்றுமே நிலைக்காது.

இதே நேரம் நாட்டில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் விரும்புகின்ற எம் மத்தியில் இவ்வாறான சந்தர்ப்பங்களை மெச்சு மெழுகி முஸ்லிம்கள் மீது பலிக் கேடயத்தை திணித்து, முஸ்லிம் அமைச்சர்கள், தலைவர்கள், எம்.பிக்களை மனமுடையச் செய்துவிட்டு வாய்க்கு வந்ததெல்லாம் சொறிந்து சமூகத்தை இழுக்காக்க எத்தணிப்பதில் சிலரது உள்நோக்கங்கள் வெளிபுரழ்கின்றது.

குறுகிய உள் நோக்கத்தில் அரசியல் இலாபம் தேடும் அதிஷ்டாலிகளாக மாற அமைச்சரை இன்று பலிக் கேடயமாக்க நினைத்துள்ளனர். இது ஒரு போதும் நிறைவேறாது. அரசியலுக்கு அப்பால் நாட்டுப்பற்றும், அனைத்து இனத்தவர் மீதும் அக்கறை கொண்டவர் அமைச்சர் ரிஷாத் என்பதை ஆணித்தரமாக தெரிவிக்கின்றேன்.

எனவே, இவ்வாறான அவநம்பிக்கைப் பிரேரனை மூலம் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற விடயமானது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *