‘பதறை’ நெல் ஆக்க முனையும் கல்முனை உப செயலகம்! – நஸீர் ஹாஜி கொந்தளிப்பு

“கல்முனை உப செயலகம் தன்னாதிக்கத்தால் தடைதாண்ட எத்தணிக்கின்றது. இது பலவந்தத்தினால் வீரம் பேசி, பாதியாக தவிக்க வைக்க முனையும் தந்திரச் செயல். இதன் உண்மை வரலாறு என்னிடம் உள்ளது.”

இவ்வாறு கல்முனை நஸீர் ஹாஜி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன நல்லுறவை சீர்குலைப்பதற்கான பல முன்னெடுப்புக்களை சில விஷமக் குழுக்கள் மேற்கொள்கின்றன. அவர்களின் சதி 1980 காலப் பகுதிகளில் இருந்தே அடிக்கல் நடப்பட்டு விட்டது.

அன்று தமிழ் – முஸ்லிம் சீர் குலைவுக்காக பாடுபட்ட சில குள்ளநரி இயக்கங்களின் தாக்கம் இன்று நஞ்சு விதைத்த கருவாக சீற்றம் பெற்றுள்ளது.
1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட பிரதேச செயலாளர் திட்டத்தின் போதே, பிரிந்து கொண்டு தனி அலகு கேட்டு அற்ப எண்ணங்களால் இவ் அலுவலகத்தை இரண்டாக கிழித்துச் சென்று உப செயலகம் உருவாக்கினர்.

உப செயலாளர் இன்று செயலாளர் என்ற நாமம் பொறித்த இறப்பர் முத்திரையையும் சட்டவிரோதமாக உபயோகித்துக் கொண்டிருக்கின்றார்.
இப்படி வரலாற்றை முடிக்கி அதிகார மோகத்தால் ஆவணம் கொண்ட சிலரின் குள்ளநரி விடயங்களுக்கு இன்று கல்முனை மக்கள் பகடக்காயாக மாறியுள்ளது. அது சீற்றம் பெறுவதும் தற்கால அரசியல்வாதிகளுக்கான தேர்தல் உண்டியல்.

உண்மையில், யதார்த்தபூர்வமாக சிந்தித்தால் 3 நிமிட நடை தூரத்தில் இருக்கும் குறித்த அலுவலகத்திற்கு தனியலகு எதற்கு? மக்கள் ஒருமித்து வாழுகின்ற இவ்வூருக்கு தனி அலகு எதற்கு? – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *