இரண்டரைக் கோடி ரூபா சம்பளம் பெறும் சமந்தா!

சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தாவின் அம்மா மலையாளம், அப்பா தெலுங்கு. சென்னை பல்லாவரத்தில் வளர்ந்த சமந்தா, ஹோலி ஏஞ்செல்ஸ் பள்ளியில் படித்தவர்.

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம் படித்த சமந்தா, அப்போதே தனது செலவுகளுக்காக மொ டலிங் துறையைத் தேர்வுசெய்து சில விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

1940களில் பொலிவூட்டில் பெரும் புகழுடன் இருந்த நடிகை ஆட்ரே ஹெப்பர்ன் தான் சமந்தாவின் ரோல் மாடல்.

தமிழில் ரேவதி நடித்த படங்கள் இவரது பேவரிட். கண்ணாடி முன்பாக நின்று நடித்துப் பழகும்போது பேசுகிற வசனங்கள், இவர்கள் இருவரது வசனங்களாகத்தான் இருக்கும் என்று கூறி இருக்கிறார் சமந்தா. இரண்டு கோடி ரூபா சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சமந்தா, ‘யூ டர்ன்’ படத்துக்குப் பிறகு தனது சம்பளத்தை இரண்டரைக் கோடி ரூபாவாக உயர்த்தியிருக்கின்றார்.

மலையாளத்தில் ‘அம்மா’ அமைப்பைப் போல், தமிழ் சினிமா நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஓர் அமைப்பை நிறுவ இருக்கின்றனர் தமிழ் நடிகைகள். அதில், சமந்தாவுக்கு முக்கியப் பொறுப்புத் தரப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *