எத்தியோப்பிய விமான விபத்து – இறுதி சடங்குக்கு கருகிய மண் ஒப்படைப்பு

எத்தியோப்பியாவில், மார்ச் 10 அன்று நடந்த விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கருகிய மண் மட்டும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 157 பேரின் உடல் எச்சங்களை அடையாளம் கண்டுபிடிக்க குறைந்தது ஆறு மாத காலம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தப்படவுள்ள அந்த மண், அவர்களுக்கான கல்லறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் புதைக்கப்படும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

தங்கள் உறவினரை இழந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கிலோ மண் கொடுக்கப்பட்டது.

தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அல்லது வெளிநாடுகளில் இருக்கும் அந்த விமான சேவை நிறுவனத்தின் அலுவலகங்களில், இறந்தவர்களின் உறவினர்கள் டி.என்.ஏ மாதிரிகளை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *