வடக்கு மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு: ரணில் தலைமையில் கொழும்பில் கூட்டம்!

வடக்கு மாகாணத்தில் வனஜுவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் ஆகியவற்றால் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இதன்போது தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

வடக்கில் வனஜுவராசிகள் திணைக்களத்தால் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடப்படவில்லை.

இதேபோன்று வனவளத் திணைக்களமும் மக்களுடன் கலந்துரையாடாமல் காணிகளை ஆக்கிரமிக்கின்றனர்.

இவை தொடர்பில் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்தே புதன்கிழமை கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *