புதிய அரசமைப்பு நிறைவேறாது! – அடித்துக் கூறுகின்றார் வெல்கம
நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படவுள்ள புதிய அரசமைப்பு யோசனை ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
களுத்துறைப் பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே அவர் இதனைக் கூறினார்.
எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி செய்கின்ற செயற்பாடுகளின் பின்னால் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.