தமிழரின் போராட்டத்தை சுமந்திரன் முன்னெடுப்பு! – கம்மன்பில கூறுகின்றார்

தமிழர்களின் அடுத்தகட்டப் போராட்டத்தை இப்போது சுமந்திரன் எம்.பி. முன்னெடுத்து வருகின்றார் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தெரண தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“தமிழர்களின் பிரிவினைப் போராட்டத்தை முதலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் செல்வநாயகம் ஆரம்பித்தார். பின்னர் இரண்டாம் கட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்தினார். அடுத்தகட்டத்தை இப்போது சுமந்திரன் முன்னெடுக்கின்றார்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *