7 நாட்களில் 18 தமிழர்கள் கிழக்கில் இனமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்!

” ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்களும், எம்.பிக்களும் தென் இலங்கையில் ஒரு முகத்தையும் வட கிழக்கிலுள்ள  தமிழ்த் தலைமைகளுக்கும் வேறொரு முகத்தையும் காட்டுகிறார்கள். இதை நம்பி ஒரு சிலர்   ஏமாறுவது வேதனைக்குரிய விடயமாகும்.”
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் கவலை வெளியிட்டுள்ளார்.
ச.வியாழேந்திரன் எம்.பியின் கோரிக்கைக்கு அமைய, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் 65 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தமிழ்த் தலைமைகள் சிலர் நல்லிணக்கம் பேசிக்கொண்டு காலத்தை கழிக்கின்றார்கள்.
ஆனால் மற்றைய சமூக அரசியல் வாதிகள் நல்லிணக்கம் என்ற போர்வையிலே கிழக்கில் உள்ள தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்வாற்குரிய வேலைகளை இராஜதந்திரமாகவும் நாசுக்காகவும் செய்துகொண்டிருக்கின்றனர்.
இன்று கிழக்கு தமிழ் தலைமைகளுக்கு மற்றைய சமூக அரசியல்வாதிகள் நற்சான்றிதழ் கொடுக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போது எந்த அளவிற்கு அவர்களின் செயற்பாடுகள் செல்கிறது என்பதை மக்கள் அறிந்திருக்கவேண்டும்.
கிழக்கு மாகாணத்திலே நாளுக்குநாள் தமிழர்களின் இருப்பும் வளமும் சூரையாடப்பட்டு கொண்டு செல்கிறது .ஒரு வாரத்திற்கு கிழக்கு மாகாணத்திலிருந்து 18 பேர் தமிழர்கள் இனமாற்றப்படுகின்றார்கள், 115 சதுரக்கிலோ மீற்றர் அளவான நிலப்பரப்பு 2009ம் ஆண்டிற்கு பின் மட்டக்களப்பு மாவட்டத்திலே பல கோணங்களில் அபகரிக்கப்படுகிறது.
இங்கு எமது மாகாணத்தில் உள்ள அரசியலாவாதிகளுக்கு சிலர் பிச்சைச் சம்பளம் கொடுக்கின்றனர். 10இலட்சம் ரூபா பெறுமதியான வீதி, மற்றும் 2இலட்சம் ரூபாவிற்கு கிரவல் வீதி போன்றவற்றை கொடுத்து சிறிய மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கின்ற செயற்பாடு இடம்பெறுகிறது.
நாம் எதிர்கட்சியில் இருந்துகொண்டு ஒவ்வொரு வரவுசெலவுதிட்டத்திற்கும் அரசாங்கத்தை வாழவைப்பதற்காக கைகளை உயர்த்தினோம். அதுமட்டுமல்லாது பிரதமருக்கொதிரான நம்பிக்கயில்லா தீர்மானம் வாந்தபோதும் கைகளை உயர்த்தினோம்.
முதல்தடவை நானும் உயர்த்தினேன் .இரண்டாவது தவவை உயற்றவில்லை. இன்று கிழக்கில் என்ன நடந்துள்ளது ஒன்றுமேயில்லை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வா அந்த தீர்வும் இன்று எமக்கு கேள்விக்குள்ளாகியுள்ளது.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *