மத்திய மற்றும் ஊவாவில் தமிழ்ப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

தைப்பொங்கலை முன்னிட்டு  நாளை (14) ஆம் திகதி  ஊவா மாகாணத்தின் அனைத்து தமிழ்ப்பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தின் தமிழ்ப்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள்  , பொற்றோர் என பல தரப்பினரும், ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமானிடம் விடுத்தவேண்டுகோளுக்கமையவே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தைப்பொங்கல் தினத்திற்கு முதல் தினமான  14.01.2019 விசேட விடுமுறையினை வழங்கும்படி மாகாண தமிழ்க்கல்விக்கு பொறுப்பான பணிப்பாளருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்விடுமுறை தினத்தினை வாரத்தின் சனிக்கிழமையன்று ஈடுசெய்வதற்கும் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பாடசாலை நடாத்தும் தினமாக கணிக்கப்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கும், மேற்படி விசேட விடுமுறை நாளை (14) வழங்கப்பட்டுள்ளது.

வட மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றின் தமிழ்ப்பாடசாலைகளுக்கும், மேற்படி விசேட விடுமுறைகள், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன

.இவ் விடுமுறை அறிவிப்பினையடுத்தே, ஊவா உள்ளிட்டு மத்திய மாகாணங்களிலும் அவ்விசேட விடுமுறைகள் பின்பற்றப்பட்டிருப்பமை, இங்கு குறிப்பிடத்தக்கது.

பதுளை நிருபர்

எம். செல்வராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *