வத்தளையில் பயங்கரம் ! இருவர் சுட்டுக்கொலை!! பாதாளகோஷ்டி வெறியாட்டம்!!!

வத்தளையில் இன்று (13) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

வத்தளை, ஹேகித்தவிலுள்ள  ஐயப்பன் சபரிமலை கோவிலுக்கு அருகாமையிலேயே  மாலை 3.30 மணியளவில் இப்பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிறிய ரக மோட்டார் வாகனத்தில் , முகத்தை மூடியவாறு வந்த குழுவொன்றே  சினிமாப்பாணியில் துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு  தப்பிச்சென்றுள்ளது.

கொட்டாஞ்சேனை, ஜிந்துப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 33 வயதுடைய   இளைஞர்களே, காருக்குள் வைத்தே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவரும் இரண்டு பாதாளக்குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக இடம்பெற்றுவந்த மோதலே கொலைச்சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொச்சிக்கடை பகுதியை மையமாகக்கொண்டு இயங்கும் பாதாள்குழுவின் உறுப்பினர்களே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *