படுக்கையறையில் பாம்பாகமாறிய மனைவி – கணவன் செய்த கொடூர காரியம்!

அவுஸ்திரேலியாவில் பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் காலை ஹாக்கி மட்டையால் தாக்கிய கணவன் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தன்று குறித்த பெண்மணி பாம்பு போன்ற டிசைன் கொண்ட ஸ்டாக்கிங்ஸ் அணிந்து கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் இரவில் அறைக்குள் வந்த கணவர், விளக்குகள் அணைக்கப்பட்டிருந்ததால் கட்டிலில் இரண்டு பாம்பு கிடக்கிறது என தவறாக நினைத்து விட்டார்.

உடனடியாக அருகில் இருந்த பேஸ்பால் பேட்டால் அந்த பாம்புகளை, அதாவது மனைவியின் காலில் பலமாகத் தாக்கியுள்ளார். மனைவி வலியில் அலறியபோது தான் அவருக்கு உண்மை தெரியவந்துள்ளது.

அது பாம்பு அல்ல மனைவியின் கால்கள் என்று உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் கணவன். தற்போது காலில் பலத்த காயமடைந்த மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் மற்றும் அவரது கணவரின் பெயர் ஊடகங்களில் வெளியாகவில்லை என்பது அவரது அடிபட்ட கால் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *