Lead NewsLocal

தமிழருக்கு எப்போதும் எதிரானவரே மஹிந்த! – கூறுகின்றது ஐ.தே.க.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது தரப்பினர் எப்போதுமே தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு தொடர்பில் அரசியல் கட்சிகள் மாறுப்பட்ட கருத்துக்களைக் குறிப்பிடுவது தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் அரசு சமர்ப்பிக்க உத்தேசித்துள்ள புதிய அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவரது தரப்பினருக்கும் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

அரசமைப்பு விடயத்தில் இனவாதத்தைப் பரப்பி மக்கள் மத்தியில் பிழையான பிரசாரங்களையே மேற்கொள்கின்றனர். மஹிந்த உட்பட அவரது தரப்பினர் எப்போதும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள்.

தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் தீர்வு கிடைப்பதற்கு இவர்களே ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

இன்று அவர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் கைகோர்த்துள்ளனர்.

பெரும்பான்மை இனத்திலும் சில அடிப்படைவாதிகள் காணப்படுகின்றனர்.

அடிப்படைவாதிகளின் ஆதரவு மாத்திரம் கிடைக்கப் பெற்றால் போதும் என்று கருதியே இன்று மஹிந்த புதிய அரசமைப்புக்கு எதிராக அவரது தரப்பினரைத் தூண்டி விடுகின்றார்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading