பொன்சேகா – தெவரப்பெரும மோதல் உக்கிரம்! – அந்தரங்க விடயங்களும் அம்பலம்

சரத் பொன்சேகா, பாலித தெவரப்பெரும ஆகிய ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கிடையிலான சொற்சமர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இருவரும் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து வருவதுடன், அந்தரங்க விடயங்களையும் அம்பலப்படுத்தி வருகின்றனர். இதனால், அரசியல் களத்தில் இவ்விருவருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகின்றது.

வனஜீவராசிகள் அமைச்சராக சரத் பொன்சேகா பதவி வகித்தபோது அத்துறையின் பிரதி அமைச்சராக பாலித தெவரப்பெரும செயற்பட்டார்.

அக்காலப்பகுதியில் பொன்சேகாவால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டி, அவர்மீது பலகோணங்களில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் தெவரப்பெரும.

இதற்கு மறுநாள் பொன்சேகா பதிலடி கொடுத்தார். தெவரப்பெரும குடிகாரன், இத்தகைய நபர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரினார்.

இதனால், கடுப்பாகிய தெவரப்பெரும, பொன்சேகா சர்வாதிகாரி என்றும், மனித நேயம் அற்றவர் என்றும், சொகுசு வாழ்க்கை வாழ்பவர் என்றும் குறிப்பிட்டு சில அந்தரங்க விடயங்களையும் அம்பலப்படுத்தினார்.

இதற்குப் பொன்சேகா பதிலடி கொடுக்க, அதற்கு தெவரப்பெரும பதிலளிக்கவென சொற்சமர் தொடர்ந்து வருகின்றது. இடையிலேயே இருவரும் பகிரங்கமாக சவால்களையும் விடுத்து வருகின்றனர்.

அமைச்சு வாகனம் துஷ்பிரயோகம், குடும்ப உறுப்பினர்கள் பதவிகளுக்கு நியமனம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கல், அரச அதிகாரிகள் மிரட்டப்படுகின்றமை உட்பட மேலும் பல விடயங்கள் இம்மோதலால் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *