என் வழி தவறெனில் தைரியமாக சுட்டிக்காட்டுங்கள் – அதிகாரிகளிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை!

கல்வி கட்டமைப்பின் உன்னத நலனுக்காக கட்சி பேதங்கள் பராமல் ஒரே நோக்குடன் செயற்பட வேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்தார்.

புத்தாண்டை முன்னிட்டு கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (01) முற்பகல் கல்வி அமைச்சில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்

கல்வி அமைச்சின் ஊடாக சீரான பெறுபேறுகளை பெற்றுகொள்ள முடியுமான கொள்கை மற்றும் தீர்மானங்களை எடுக்க வேண்டும். இந்த தீர்மானங்களை குறிப்பிட்ட கால தவனைக்குள் செயலுக்கு கொண்டு வர வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் கல்வி கட்டமைப்பின் நலனுக்காக அனைவரும் திட்டமிட்டு ஒரே நோக்குடன் செயற்பட்டால் எதிர்பார்த்த இலக்குகளை துரிதமாக வெற்றி கொள்ள முடியும்.

தன்னுடைய தனிப்பட்ட கொள்கையை அன்றி அரச கொள்கையையே நான் அமைச்சராககடைப்பிடிக்கின்றேன்.

இதன்படி அனைத்து அரச ஊழியர்களும் அரச கொள்கையை அமுலுக்கு கொண்டு வருவதில் உடன்படுகின்றனர்.

கல்வி துறையின் அபிவிருத்திக்காக தான் தலைமைத்துவம் வழங்குவதுடன் இதன்போது எடுக்கும் கொள்கை ரீதியான தீர்மானங்களில் தவறுகள் இருந்தால் எந்தவொரு அதிகாரியாக இருந்தாலும் தன்னுடன் பேசி அதனை தீர்த்து கொள்ள முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் ஆணையின் ஊடாக ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தின் நோக்கங்களுடன் அரச ஊழியர்களும் செயற்பட வேண்டும்.

அவ்வாறு செயற்பட தவறினால் அரசாங்க விரோத செயலன்றி அரச விரோத செயலாகவே அதனை தான் கருதுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *