குழந்தையின் உடலில் 108 இடங்களில் சிகரட் சூடு – தாயின் கள்ளக்காதலன் வெறிச்செயல்! ஊவாவில் கொடூரம்!

ஒரு வயதும் பத்து மாதங்களுமான வயதையுடைய ஆண் குழந்தையின் உடம்பெங்கும் பற்றவைத்த சிகரட்னால் சுட்டு கொடுமைப்படுத்திய, தாயின் ஆசைநாயகனைத் தேடி, சியாம்பலாண்டுவைப் பொலிசார் வலை விரிந்துள்ளனர்.

சியாம்பலாண்டுவைப் பகுதியின் முத்துக்கண்டி என்ற கிராமத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சியாம்பலாண்டுவைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து 28-12-2018ல் இரவு விரைந்த பொலிசார் குறிப்பிட்ட வீட்டை சுற்றிவலைத்து தேடுதல்களை மேற்கொண்டனர்.

அவ்வேளையில் தாயின் ஆசை நாயகனினால் (கள்ளக்காதலன்)

சித்திரவதைக்குற்பட்ட ஆண் குழந்தையை மீட்டு சியாம்பலாண்டுவை அரசினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அக் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், அக் குழந்தை உடம்பெங்கும் 102 சூட்டுக் காயங்கள் இருப்பதை டாக்டர் உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட குழந்தையை சித்திரவதைக்குற்படுத்திய, தாயின் ஆசை நாயகனைக் கைது செய்ய முயன்றும், அம் முயற்சி பயனளிக்கவில்லை.

அந்நபர் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியிருப்பதாகவும், விரைவில், அந் நபரைக் கைது செய்ய முடியுமென்றும் பொலிசார் தெரிவித்தனர்.

இக் குழந்தையின் தாய் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டவரின் மூலமாக, மேற்குறிப்பிட்ட குழந்தை பிரசவமாகி, குழந்தைக்கு ஒரு வருடமாகியதும், குழந்தையின் தாய், சட்டப்பூர்வ கணவனை விட்டுப் பிரிந்து, ஆசை நாயகனுடனேயே வாழ்ந்து வந்தமை பொலிசாரின் ஆரம்ப விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *