‘யானை’, ‘கை’, ‘மொட்டு’ சங்கமம்! கதிர்காமத்தில் நிறைவேறியது பட்ஜட்!!

கதிர்காமம் பிரதேச சபையின் (2019) அடுத்தாண்டிற்கான வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை, பன்னிரண்டு (12) மேலதிக வாக்குகளால் இன்று (27)நிறைவேற்றப்பட்டது.

கதிர்காமம் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற, சபை அமர்வின் போது, சபைத் தலைவர் சானக்க அமில ரங்கனவினால், வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, வாசிக்கப்பட்டது.

இதையடுத்து, சபையில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்று, நிதி அறிக்கை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார் 7 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக்கட்சி சார் 6 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார் ஒருவருமாக 14 பேர் ஆதரவாக வாக்களித்தனர். ஜே.வி.பி. உறுப்பினர்கள் இருவர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்.

இதன் பிரகாரம், 12 அதிகப்படியான வாக்குகளினால் நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

எம். செல்வராஜா பதுளை நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *