அடக்க முடியாத காரணத்தினால் பறந்து கொண்டிருந்த விமானத்தை நடுவீதியில் நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்த விமானி

சிறுநீரை அடக்க முடியாத காரணத்தினால் வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தை, ரோட்டில் நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்கச் சென்ற விமானியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் தென்கிழக்கில் கடற்கறையை ஒட்டி அமைந்துள்ள அழகிய இயற்கை எழில் கொஞ்சும் மாகாணம் தான் அலபாமா.
இந்த மாகாணம் சுற்றுலா பயணிகளின் ஆதர்ச இடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு தான் அந்த சம்பவம் நடந்துள்ளது. விமான பைலட் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர் ஒருவர், சிறிய ரக விமானத்தை எடுத்துக்கொண்டு வானில் பறந்துள்ளார்.
அப்போது அலபாமா தேசிய நெடுஞ்சாலையின் மேல் சென்ற விமானம் திடீரென நெடுஞ்சாலையில் தரை இறங்க, சாலையில் சென்ற பயணிகள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த ஓர் தம்பதி காரை விமானம் அருகே நிறுத்தி விமானத்தை வீடியோ படம் எடுத்தனர்.
விமானி எதற்காக விமானத்தை சாலையில் தரைஇறக்கினார் எனத் தெரியாமல் அவர்கள் படம் எடுத்துக்கொண்டிருக்கவே, விமானி அவசரமாக விமானத்தில் இருந்து இறங்கிவந்து சாலையோரத்துக்குச் சென்று சிறுநீர் கழித்தார்.
இதுவும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் அங்கு பலரை சிரிக்க வைத்துள்ளதுடன் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *