வனப்பகுதியில் தியானம் செய்து கொண்டிருந்த புத்த மதத்துறவியை கடித்துக்கொன்ற சிறுத்தை !
மராட்டிய வனப்பகுதியில் தியானம் செய்து கொண்டிருந்த புத்த மதத்துறவியை சிறுத்தை கடித்துக்கொன்றது.
மராட்டிய மாநிலம் ராம்தேகி காட்டில் ராகுல் வாக்கி போதி என்ற 35 வயது புத்தத் துறவி மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார், காலை நேரமான அப்போது சிறுத்தை அவர் மீது பாய்ந்து கடித்துக்கொன்றது.

சிறுத்தை புலி நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியை ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட இடமாக வனத்துறை அறிவித்துள்ளது. ஆபத்தான பகுதி என்ற அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி புத்தத் துறவிகள் இங்கு காலையில் தியானம் செய்ய வருவதாக புகார்கள் உள்ளன. நடப்பு மாதத்தில் இது போன்ற தாக்குதல்கள் நடைபெறுவது இது 5-வது முறையாகும். 825 கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வனப்பகுதி மும்பையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.