திருமலையில் காணிகளை விடுவித்தனர் படையினர்!

திருகோணமலை மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மக்களின் காணிகளில் 12 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநரது செயலகத்தில் நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெற்றது.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 12 ஏக்கர் காணிகளை இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஐயசேகர கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் கையளித்தார்.

குச்சவெளி பிரதேச சபைக்குற்பட்ட கல்லம்பத்தை எனும் பகுதியில் 5 ஏக்கர் காணிகளும், மூதூர் பிரதேச செயலர் பிரிவில் பாட்டாளிபுரம் பகுதியுல் 2 ஏக்கர் காணிகள் மற்றும் தோப்பூர் பகுதியுல் 3 ஏக்கர் காணிகளும், சேருநுவர பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சித்தாறு பகுதியில் 2 ஏக்கர் காணிகளும் அடங்கலாக மொத்தமாக 12 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஐயசேகர, 22ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உருப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், மாவட்ட அரச அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார, பிரதம செயலாளர் சரத் அபயகுணவர்தன, திணைக்களச் செயலாளர்கள் முப்படை அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் பங்கேற்றிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *