mCash இன் புத்தாக்கம் மற்றும் நிதி உள்ளடக்கம்

2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி நிறுவப்பட்டது முதல் 5 வருட காலப்பகுதியான மிகவும் குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கையின் மிகப்பெரிய நிதிச் சேவைகளின் சில்லறை வலைபின்னலில் ஒன்றாக மிகவும் வலுவாக வளர்ந்து வந்துள்ள mCash தமது ஆவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகறிது.

மொபிடெல் இனால் அறிமுகப்படுத்தப்பட்ட mCash நாட்டில் முன்னணி வகிக்கும் மொபைல் நிதிச்சேவைகள் தளமாகும். இது இலங்கையின் நிதிப்பரிமாற்றச் செயன்முறையை முற்றும் முழுதாக மாற்றியமைத்தது. உண்மையிலேயே தமது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் மொபைல்  போன்களை பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் தங்கள் நிதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

mCash இன் செயற்திறனும், வேகம் மற்றும் வசதியை மொபிடெல் மற்றும் எடிசலாட் வாடிக்கையாளர்களின் பெருகிவரும் எண்ணிக்கை அதிகரிக்க இம்மொபைல் பணத் தளத்தின் மூலம் அவர்கள் வாழ்வும் மேம்படுத்தப்பட்டது. mCash ஆனது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் பண ரீதியான பாதுகாப்பினை உறுதிப்படுத்துகிறது.

இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் பெற்றும் கொமர்ஷல் வங்கியின் பாதுகாப்புடனும் Deutsche வங்கி அறங்காவலர் வங்கியாகவும் விளங்குவதன் மூலம் இது வாடிக்கையாளருக்கு பண ரீதியான பாதுகாப்பினை உறுதிப்படுத்துகிறது. மேலும் தேசிய மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல் இன் ஆதரவுடன் mCash ஆனது ஓர் வீட்டுக்குரிய வர்த்தக நாமமாக உருப்பெற்றது.

mCash இன் 5ஆம் ஆண்டு நிறைவையொட்டி மொபிடெலின் மொபைல் நிதிச்சேவைகள் பிரிவின் பொது முகாமையாளரான திரு. கல்ஹார கமகே கருத்து தெரிவிக்கையில்,

“குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மொபைல் நிதிச் சேவைகள் தளங்களுள் ஒன்றாக mCash உருவெடுக்க எடுத்துக்கொண்டுள்ள பாரிய நடவடிக்கைகளையும் முன்னேற்றங்களையும் கண்டு பெருமிதம் கொள்கிறோம். mCash இன் ஒவ்வொரு திருப்பத்திலும் புத்தாக்கத்திறகான அர்ப்பணிப்பு மிகவும் தெளிவாக புலப்படுகிறது.

mCash  இன் வெற்றிக்கு அதன் ஒவ்வொரு திருப்பத்திலும் புத்தாக்கத்துக்கான அர்ப்பணிப்பானது புலப்படுகிறது. mCash அறிமுகப்படுத்திய ஒவ்வொரு புத்தாக்கத்துடனும் இலங்கை மக்களின் பணப்பரிவர்த்தனை இலகுவாகியுள்ளது. 100இற்கும்  மேற்பட்ட பங்குதாரர்களுடன் 16,000 இடங்களைக் கொண்டுள்ள சில்லறை வலைபின்னலை நாடு முழுவதும் கொண்டுள்ளது.

மக்களுடைய வேறுபட்ட வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ற வணிக ரீதியிலான தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு இது பல்வேறுவிதமான அற்புத சேவைகளை வழங்குகிறது. அஊயளா இனால் செய்யமுடியாதது ஒன்றுமில்லை மற்றும் இவ்விதமான அணுகுமுறையானது எதிர்காலத்தில் இன்னும் பல மைல்கற்களை கடந்து முன்னோக்கி நகர்ந்திட எமக்கு உறுதுணையாய் இருந்திடும்.”

mCash ஆனது பரந்துபட்ட சேவைத் தெரிவுகளை மொபைல்  போனின் மூலம் உங்களுக்கு வழங்குகிறது. மீள் பெறுகை. பணப் பரிமாற்றம், பாவனைப் பட்டியல் கட்டணங்கள், காப்புறுதி கட்டணங்கள் மற்றும் லீசிங் கட்டணங்கள், அரச வரிக் கட்டணங்கள், ஆதாரக் கொடுப்பனவுகள் மற்றும் பொருட்கள், சேவைகளின் கொள்வனவுகள் போன்றவற்றை இது உள்ளடக்கியுள்ளது.

டிஜிட்டல் உள்ளடக்கத்துக்காக தம்மை அர்ப்பணித்துள்ள அஊயளா ஆனது ஏனைய மொபைல் சேவை வழங்குனர்களுடனும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளது. எடிசலாட் வாடிக்கையாளர்களுக்கும் இதன் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதுடன் mCash இன் பரந்தவரிசை சேவைத் தெரிவுகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

எந்தவொரு மொபிடெல் மற்றும் எடிசலாட் வாடிக்கையாளருக்கும் #111# என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் mCash சேவைகளை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். Apple App Store, Google Play Store மூலம் இந்த Windows Mobile Store  இனை பதிவிறக்கம் செய்துகொள்ளக்கூடியதுடன் இந்த APP ஆனது பாவனையாளர்களுக்கு தங்கள் பரிவர்த்தனைகளை மேலும் இலகுவாக்கியும் உள்ளது.

மிகவும் அண்மைக் காலத்தில் இலங்கையில் முதன் முறையாக மொபைல் போன் தளத்தின் ஊடாக ரூ.25,000 ஐ உச்ச கடன் தொகையாக பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை அஊயளா அறிமுகப்படுத்தியது.

டுழுடுஊ குiயெnஉந உடன் கூட்டிணைந்ததன் மூலம் இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் வாடிக்கையாளர்களுக்கு மொபைலின் மூலம் மிகவும் இலகுவாக கடன் வசதியைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். இந்த டிஜிட்டல் கடன்கள் அடிமட்ட மக்களுக்கும் நிதி அணுகலுக்கு வழிவகுக்கின்றன.

மேலும் அஊயளா சேவை Nளுடீ உடன் இணைந்து Nளுடீ iளுயஎநச சேவையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பண வைப்புக்களை மேற்கொள்ள முடியும். எந்தவொரு இலங்கையருக்கும் நாடு முழுவதும் உள்ள அஊயளா இன் 16,000ூ இற்கும் அதிகமான பரந்த சில்லறை விற்பனை நிலையங்கள் வலையமைப்பினை அணுகுவதன் மூலம் டிஜிட்டல் சேமிப்பு செய்திட முடியும். இதுவோர் டிஜிட்டல் சேமிப்பு தயாரிப்பு என்ற வகையில் சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குவது மட்டுமன்றி அதன் டிஜிட்டல் பயன்பாட்டையும் ஊக்கப்படுத்துகிறது.

mCash ஆனது மூலோபாய கூட்டிணைவினையும் மேற்கொண்டுள்ளது. அட்டையற்ற ATM பண மீளப்பெறுகைகளை கொமர்ஷல் வங்கியுடன் இணைந்து அறிமுகப்படுத்தியது. இலங்கையில் முதன்முறையாக mCash வாடிக்கையாளர்களுக்கு அட்டையற்ற பணப் பரிவர்த்தனை வசதி வழங்கப்பட்டதுடன் இவ்வசதியை மேலும் வழங்கிட அண்மையில் mCash சம்பத் வங்கியுடன் கூட்டிணைந்தது. இதன் மூலம் இலங்கையில் 1000க்கும் மேற்பட்ட மிகப்பெரிய யுவுஆ வலையமைப்பினையும் மொபைல் மூலமான பணப்பரிவர்த்தனைகளுக்காகப் பெற்றுக் கொண்டது.

mCash வாடிக்கையாளர்களின் மேலதிக வசதிக்காக ஒரு QR Code இனை அறிமுகப்படுத்தியது. நீங்கள் கொள்வனவு செய்ய விரும்பும் பொருளின் QR Code இனை ஸ்கான் செய்வதன் மூலம் அதன் கொடுப்பனவு செயன்முறைகளை இலகுவாக மேற்கொள்ளலாம். இது தற்போது நாடு முழுவதும் அஊயளா டொப் அப்களுக்கு, மீளப் பெறுகைகள், பணப் பரிமாற்றம் மற்றும் mCash வர்த்தகர்களிடம் பொருட்கள், சேவைகளின் கொள்வனவுகள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.

mCash B2B  தீர்வுகள் வணிகத்தினை மாற்றியமைக்கிறது. அத்துடன் mCash Robust Platform  ஆனது வங்கி, காப்புறுதி, நிதி மற்றும் சுற்றுலா போன்ற தொழிற்துறைகளுக்கு வலுசேர்க்கிறது.

காதலர் தினம், நத்தார் மற்றும் பண்டிகைக் காலங்களில் mCash தமது வாடிக்கையாளர்களுக்கு புகழ்மிக்கதும் ஒப்பற்றதுமான சலுகைகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் mCash கணக்கினை முன்னணி வகிக்கும் வங்கிகளின் இணையம் மற்றும் மொபைல் வங்கியின் மூலம் ஒரு பொத்தானை அழுத்தி டிஜிட்டல் முறையில் டொப்அப் செய்துகொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *